இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரமுகி திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, 18 ஆண்டுகளுக்கு பின் சந்திரமுகி பாகம் 2 திரைப்படத்தை பி. வாசு இயக்கியுள்ளார்.ஆனால், இப்படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும் சந்திரமுகி கதாபத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க, ராதிகா, வடிவேலு, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே இப்படத்திலிருந்து வேட்டையன் ராகவா லாரன்ஸ் First லுக் வெளிவந்த நிலையில்,
தற்போது சந்திரமுகி கங்கனாவின் First லுக் போஸ்டரை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளனர்.
பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.