அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அம்பாந்தோட்டை, சூரியவெவை பிரதேசத்தில் நேற்று (04.08.2023) இரவு இடம்பெற்றுள்ளது. உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய தம்பதியினரே குறித்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
தம்பதியினர் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியோரத்தில் இருந்த மரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 52 வயதுடைய கணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும், 48 வயதுடைய மனைவி படுகாயங்களுடன் சூரியவெவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் விபத்து தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.