ஜஃப்னா கிங்ஸ் 08 விக்கட்களால் வெற்றி

லங்கா பிரீமியர் லீக்(LPL) கிரிக்கெட் தொடரின் நேற்றைய நாளுக்கான இரண்டாவது போட்டியில் ஜஃப்னா கிங்ஸ் அணி 08 விக்கட்களால் தங்கள் வெற்றியை உறுதிபடுத்தியது.
இப்போட்டியின் நாணய சுழற்யில் வெற்றி பெற்ற கோல் டைட்டன்ஸ் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்த நிலையில் கோல் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கட்களை இழந்து 117 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
கோல் டைட்டன்ஸின்
தசுன் ஷானக்க தங்கள் அணிக்காக அதிகபட்சமாக 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.
பந்துவீச்சில் ஜஃப்னா கிங்ஸ் அணியின் துனித் வெல்லாலகே 4 விக்கட்களை வீழ்த்தினார்.
இந்தநிலையில், 118 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய ஜஃப்னா கிங்ஸ் அணி 12.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்களை மாத்திரம் இழந்து இலக்கை அடைந்து வெற்றியீட்டியது.
துடுப்பாட்டத்தில் ஜஃப்னா கிங்ஸ் அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ் 54 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றிருந்தார்.