நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மழையுடனான வானிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.