வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேனும் முதலில் தேர்தலை நடத்துவதற்கு வலியுறுத்துமாறு இந்திய உயர்ஸ்தானிகருடன் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது கோரப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையிலான இச்சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றது.
இதன்போது மாகாண சபை முறைமை மற்றும் பெருந்தோட்ட மாணவர்களின் கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.