அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க அவர்கள் கருத்து தெரிவிக்கையில் “இன்சுலின் வழங்குவதற்கான டெண்டர் வழங்கப்பட்ட குறித்த வழங்குனரிடமிருந்து தேவையான அளவு இன்சுலின் வழங்கப்படாமையே இந்த நிலைக்கு காரணம்” என தெரிவித்துள்ளார்.
இப்பற்றாக்குறை காரணமாக மேலும் இரு விநியோகஸ்தர்கள் ஊடாக இன்சுலின் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.
தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக இன்சுலின் அடங்கிய 50,000 பொதிகள் அவசர கொள்வனவாக இறக்குமதி செய்யப்பட்டதாகவும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் குறித்த பொதிகள் இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.