தனக்கு தானே தீ வைத்து பொலிஸாரையும் கட்டிப்பிடித்து காயப்படுத்திய நபர்!

போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கட்டிப்பிடித்ததில் இருவரும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வந்த குறித்த நபர் தனது குழந்தையை தாக்கிய போது அதனை தடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த சம்பவத்தில் அகப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது உடம்பில் பெற்றோலை ஊற்றிக் கொண்டு தீ வைக்க முற்பட்ட போது அதை தடுக்கச் சென்ற வேளையில் அந்நபர் தீ வைத்துக் கொண்டு பொலிஸாரை கட்டிப்பிடித்துள்ளார்.

இச் சம்பவத்தில், தீக்காயங்களுக்குள்ளான நபரும் பொலிஸ் உத்தியோகத்தரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *