ரஷ்யா மீது உக்ரைன் இராணுவம் நேற்று திடீர் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள குர்ஸ்க் பகுதி மற்றும் பேல்கோரட் பகுதியை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் உக்ரைன் இராணுவத்தினர் கீவ்வில் இருந்து டிரோன்களை செலுத்தினர். இந்நிலையில் உக்ரைன் இராணுவத்தின் டிரோன்கள் வருகையை அறிந்த ரஷ்ய வான் பாதுகாப்பு தளவாடங்கள் அதனை மறித்து எதிர்த்தாக்குதல் நடத்தின.
இந்த தாக்குதலில் 25-க்கும் அதிகமான டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இந்நிலையில் உக்ரைனுக்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யா இராணுவம் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.