வடக்கு – கிழக்கு கதவடைப்பு போராட்டம்: விசேட கலந்துரையாடல்!

வடக்கு – கிழக்கில் எதிர்வரும் 20 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள கதவடைப்பு போராட்டம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழில் இடம்பெற்றது.

நேற்று (15) மாலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரனின் இல்லத்தில் கலந்துரையாடல் குறித்த நடைபெற்றது. 

இதன்போது, கதவடைப்பு போராட்டம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள், கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களைச் சந்தித்தல் மற்றும் இந்தியப் பிரதமருக்குக் கடிதம் அனுப்புதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் கொண்டிருந்தனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *