11 வயதுச் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், குருநாகலில் உள்ள பாடசாலை ஒன்றின் பேருந்து சாரதி சனிக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப் பொருள் கலந்த இனிப்புகளை வழங்கி 11 வயது சிறுவனை பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் குருநாகல் பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேகநபர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் தலா 100,000 ரொக்கப் பிணையிலும் விடுவிக்க நீதிமன்று உத்தரவிட்டது.
எவ்வாறாயினும், அவர் பிணை தொகையை செலுத்த தவறியதால், பிணையில் விடுவிக்கப்படவில்லை, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.