கொஸ்லந்தை- மீரியபெத்த பகுதியிலிருந்து திடீரென வெளியேற்றப்பட்ட மக்கள்!

கொஸ்லந்தை – மீரியபெத்த பகுதியிலிருந்து 248 குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மண்சரிவு அபாயம் காரணமாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பரிந்துரைகளின் படி இவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அந்தவகையில் 768 பேர் தமது வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் கே.ஏ.ஜே.பிரியங்கிகா தெரிவித்துள்ளார்.

மீரியபெத்தையில் முன்னதாக மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த 144 குடும்பங்களும், மஹகந்த பகுதியைச் சேர்ந்த 23 குடும்பங்களும், திவுல்கஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 81 குடும்பங்களுமே இவ்வாறு நலன்புரி முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *