இலங்கை கிரிக்கெட் அணி தலைவர் தசுன் ஷானக்க உபாதைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் புனேவில் இடம்பெற்ற பயிற்சிகளிலும் தசுன் ஷானக்க பங்குக்கொள்ளவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரனவும் உபாதைக்குள்ளாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் மதீஷ பத்திரன மற்றும் தசுன் ஷானக்க பங்குகொள்ள மாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் செயற்படவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.