யாழ். போதனா வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயல்!

யாழ்.போதனா வைத்தியசாலை நுழைவாயிலுக்கு அருகில் நபர் ஒருவரை பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் முறையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ். போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் வந்த நபர் அநாகரிகமாக நடந்து கொண்டு, பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தாக்குதலை மேற்கொண்டு வைத்தியசாலைக்குள் செல்ல முற்பட்ட போதே பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், அந்நபர் மீது தாக்குதலை மேற்கொண்டனர் என பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தரப்பு தெரிவிக்கின்றது.

சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், தாக்குதலுக்கு இலக்கான நபரையும், தாக்குதல் மேற்கொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், இருவரையும் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு நாளில் மிக அதிகமானோர் சிசிக்சைக்காக வரும் யாழ். போதனா வைத்தியசாலையின் நுழைவாயிலிற்கு முன்பாக இடம்பெற்ற இந்த மனிதாபிமானற்ற செயல் தொடர்பில் பலரும் தங்களது விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். 

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *