ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று(14)  சீனாவிற்கு பயணித்துள்ளார்.

இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பல அரசியல் மற்றும் வர்த்தக தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

இதேவேளை சீனாவுடனான கடனை மறுசீரமைப்பது தொடர்பான உடன்படிக்கைகள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார்.

ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க கடந்த வருடம் பதவியேற்றதன் பின்னர்  சீனாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பெல்ட் அண்ட் ரோட் முயற்சியின் 10ஆவது ஆண்டு உச்சி மாநாட்டில் ஜனாதிபதியும் கலந்துக்கொள்ளவுள்ளார்.

மேலும் ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின் போது கடன் நிவாரணம் தொடர்பில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும் என ஜனாதிபதி அலுவலகம் எதிர்பார்த்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *