யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் நேற்று முன்தினம் (13) வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றதாக நெல்லியடி காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த வாள்வெட்டு தாக்குதலில் 31 வயதான பொன்னுத்துரை சுஜீதரன் என்ற இளைஞரே படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில் இவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
முன்பகை காரணமாக இந்த வாள் வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக நெல்லியடி காவல்துறையினர் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.