மகளை காதலித்த இளைஞன் : நடு வீதியில் தாய் செய்த செயல்!

நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட கினிகத்தேன பிரதேசத்தில் இளைஞன் மீது பெண் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

தனது மகளுடன் காதல் உறவில் ஈடுபட்ட 19 வயதுடைய மாணவனை மகளின் தாயார் கூரிய கத்தரிக்கோலால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.

நேற்று முன்தினம் கினிகத்தேனை நகரில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு முன்பாக மாணவிக்கும் அவரது தாயாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலைலேயே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் கத்தரிக்கோலால் குத்தப்பட்டதில் 13ம் வகுப்பு மாணவன் ஒருவர் படுகாயமடைந்து உள்ளதுடன் மாணவனை கத்தரிக்கோலால் குத்திய பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காயமடைந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  குறிப்பிடப்படுகின்றது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *