மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவருமான மூன்று பிள்ளைகளின் தந்தையான பொன். செல்வராசா தனது 77 ஆவது வயதில் நேற்று காலமானார்.
நோய்வாய்ப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். அன்னாரின் இறுதி கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.