யாழில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – ஸ்ரான்லி வீதியில் இலங்கை வங்கிக்கு அருகாமையில் உள்ள ஒழுங்கை ஒன்றில் இருந்து குறித்த சடலமானது நேற்று (12) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

இதன் போது சம்பவ இடத்துக்குச் சென்ற யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை இவ்வாறு மீட்கப்பட்ட 5 அடி உயரம், பொது நிறம், நீல நிறச் சட்டை, மண்ணிறச் சேலை அணிந்த, நரை முடியுடைய பெண்ணின் சடலத்தை அடையாளம் காட்டுமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *