பிலிப்பைன்ஸில் – படங்காஸ் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிலநடுக்கமானது இன்று (13) காலை 8.24 மணியளவில் ஏற்பட்டுள்ளதுடன் 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கத்தினால் இதுவரையில் எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.