போரில் தீவிரம் காட்டும் இஸ்ரேல் : தொடர்ந்து ஒலிக்கும் அபாய ஒலி எச்சரிக்கை!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்திற்கு இடையில் நடந்து வரும் போர் ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்து வரும் நிலையில்,  தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்படி காசா மீதான தமது வான்வழித் தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.   இஸ்ரேல் இராணுவம் அதிகமான இராணுவ துருப்புகளை தெற்கு இஸ்ரேல் பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது. கனரக இராணுவத் தளவாடங்களுடன் ரிசர்வ் படைகளும் அழைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே இஸ்ரேல் குண்டு வீச்சில் ஐ.நா. ஊழியர்கள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக  வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சூழலில் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளதுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு, எதிர்க்கட்சித்தலைவர் பென்னி இடையேயான பேச்சுவார்த்தைக்குப்பின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் லெபனானில் இருந்து இஸ்ரேலிய வான்வெளிக்குள் ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் தகவல்கள் கிடைத்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து வடக்கு நகரமான மாலோட்- தர்ஷிகாவில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறும், கதவுகளைப் பூட்டிக்கொள்ளுமாறும், ஊடுருவல் சாத்தியம் குறித்து எச்சரிக்கும்படியும் இஸ்ரேலிய முகப்புக் கட்டளை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் தொடர்ந்து ஒலி எழுப்பி வருகின்றன, உயிரிழப்புகள் பற்றிய உறுதியான அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *