இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் பலர் பிணை கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகின்றது. இதனால் இரு பக்கமும் நிறைய உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
4-வது நாள் தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலில் 1,008 பேர் உயிரிழந்துள்ளனர்.3,418 பேர் காயமடைந்துள்ளனர். காசாவில் 900 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 4,250 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேல் மண்ணில் 1500 ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேல் இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. மேலும் வெஸ்ட் பேங்க் (மேற்கு கரை) பகுதியில் 21 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 130 பேர் காயமடைந்துள்ளனர்.