முல்லேரியா, அம்பத்தலையில் அசிட் வீச்சுக்குள்ளான தந்தையும் மகளும் கொழும்பு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று புதன்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தபோதே தந்தை மற்றும் மகள் மீது, வீதியில் நின்ற சந்தேக நபர் அசிட் வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் காயமடைந்த மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவிலும், தந்தை கொழும்பு கண் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.