மணல் ஏற்றிச் கொண்டு சென்ற பாரவூர்தியில் மோதுண்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குருநாகல் – பொல்கஹவெல பிரதான வீதியின் புஹுரிய சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில், பொல்கஹவெல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 45 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நேற்றுமுன்தினம் (09) இரவு குறித்த கான்ஸ்டபிள் நடமாடும் சேவையில் ஈடுபட்டிருந்த வேளை, வீதியில் வாகனங்களையும் மக்களையும் சோதனை செய்து கொண்டிருந்த போது, கந்தளேயிலிருந்து கடுவலைக்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வீதியோரத்தில் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.
இந்நிலையில் அவர் உடனடியாக பொல்கஹவெல வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று (10) உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தின் சந்தேகநபரான டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
மேலும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.