பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் பழுதடைந்துள்ள பயணிகள் மேம்பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் ஒன்றை விரைவில் அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் 5 மாத காலத்திற்குள் புதிய மேம்பாலம் நிர்மாணிக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
மேலும் அதுவரை 10 நாட்களுக்குள் தற்காலிக வீதியை அமைக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய தற்போதுள்ள மேம்பாலத்தை உடனடியாக அகற்றி விரைவாக நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்குமாறு அரச அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளார்.
அதற்காக 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது