பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேலிய படைகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.
அத்துடன் இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிணைக் கைதிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என ஹமாஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா அறிக்கை ஒன்றின் உடாக அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில்,பாலஸ்தீன மக்களுக்கு எச்சரிக்கை வழங்காமல் இஸ்ரேல் ஷெல் தாக்குதல் நடத்தினால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை கொலை செய்வோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் வீடியோ மற்றும் ஆடியோக்களை ஒளிபரப்புவோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.