மீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள தனது வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு வீடு நோக்கிச் சென்ற வர்த்தகர் ஒருவர் மீது மிளகாய்ப் பொடி வீசி தாக்கிய பின்னர் அவரிடமிருந்த சுமார் 45 இலட்சம் ரூபா பணத்தை நபரொருவர் கொள்ளையிடடுச் சென்றுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் திங்கட்கிழமை (09) அதிகாலை தனது வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு தனது முச்சக்கர வண்டியில் மற்றுமொருவரை ஏற்றிக்கொண்டு சென்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மீகொட சிறிரத்ன மாவத்தையில் வைத்து முச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர், திடீரென மிளகாய்ப் பொடியை வீசி வர்த்தகரை தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த பணப் பொதியைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.