இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1100 ஆக அதிகரிப்பு!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நடந்து வரும் உக்கிரமான மோதலில் இரு தரப்பிலும் சுமார் 1100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இரு தரப்புக்கும் இடையிலான மோதல்கள் மேலும் மோசமடைந்து வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அத்துடன் காசாவை சுற்றி வசிக்கும் மக்களை 24 மணி நேரத்தில் வெளியேற்றும் பணியில் இஸ்ரேல் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்த மோதலில் 700க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பாலஸ்தீனத்தில் 413 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த தாக்குதல்களில் இஸ்ரேலில் தங்கியிருந்த 10 நேபாள மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக நேபாள அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் உள்நாட்டு போரில் சிக்கி தவித்த இந்தியர்கள் 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு எகிப்தை சென்றடைந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மோதல் பகுதிகளில் உள்ள இலங்கையர்களுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மோதல்களில் இதுவரையிலும் ஒரு இலங்கையர் மாத்திரமே சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *