கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலில் பயணித்த பெண் பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் கழுத்திலிருந்த தங்கப் பதக்கத்துடன் கூடிய நெக்லஸை நபர் ஒருவர் ரண்மலைகொடுவ ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதக்கத்துடன் கூடிய தங்க நெக்லஸின் பெறுமதி 222,500 ரூபா என பொலிஸ் பரிசோதகர் செய்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த பொலிஸ் பரிசோதகர் கண்டி கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.