வாகன விபத்தில் சிக்கி 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (09) அதிகாலை காலமானதாக குடும்ப உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நடிகர் ஜாக்சன் அந்தோணி ஜூலை 8, 1958 இல் ராகமவில் பிறந்தார், தனது 65 ஆவது வயதில் தற்போது உயிரிழந்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்புக்காக அனுராதபுரம் பகுதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, தலாவ வீதியில் மொரகொட பிரதேசத்தில் அவர் பயணித்த கெப் வண்டி யானை மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
அவ்விபத்தில் படுகாயமடைந்த நடிகர் ஜாக்சன் அந்தோனி மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு 14 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று அதிகாலை உயிரிழந்ததாக குடும்பத்தினரின் உறவினர்கள் தெரிவித்தனர்.