நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (09) மற்றும் நாளை மறுதினம் (10) விடுமுறை வழங்கப்படுவதாக தென் மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக மாத்தறை மாவட்டத்திலும் பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே, அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி பத்தேகம பிரதேசத்தில் உள்ள ஜிங்கங்கை வெள்ள மட்டத்தை எட்டியதால் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.