மாவத்தகம பிரதேசத்தில் தனது மனைவியின் உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொலிஸ் பரிசோதகரை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இரு இடங்களில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தில் நேற்று (08) இரவு 7 மணியளவில் முதல் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், பன்னல பொலிஸ் குற்றப்பிரிவின் நிலைய கட்டளைத் தளபதியாக கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் நேற்று மாலை இந்த அதிகாரி தனது கடமைகளை முடித்துக் கொண்டு சிவில் உடையில் மோட்டார் சைக்கிளில் மாவத்தகம பிரதேசத்தில் உள்ள தனது மனைவியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, வீரம்புகெதர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீவெவ வீதித் தடைக்கும் களுகமுவ சந்திக்கும் இடையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பொலிஸ் பரிசோதகரை நோக்கி இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அப்போது பொலிஸ் அதிகாரி வழியை மாற்றி மோட்டார் சைக்கிளை குருநாகல் நோக்கி ஓட்டியுள்ளார் இந்நிலையில் மீண்டும் பிதுர்வெல்ல பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரியை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் இரண்டு சந்தர்ப்பங்களிலும் பொலிஸ் பரிசோதகர் காயமடையவில்லை.
இதையடுத்து தனது மனைவியின் உறவினர் வீட்டிற்கு வந்த பின்னர் பொலிஸ் பரிசோதகர் சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.