வாகன வருமானவரிப் பத்திரம் வழங்கும் புதிய முறை இன்று சனிக்கிழமை (7) அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) தெரிவித்துள்ளது. குறித்த புதிய முறையின் கீழ் வாகன வருமானவரிப் பத்திரத்தை நிகழ்நிலை (online) மூலம் வீட்டிலிருந்தே பெறலாம்.
பொதுமக்கள் பிரதேச செயலகங்களுக்குச் செல்லமால் நாட்டில் எங்கிருந்தும் தமது வாகன வருமானவரி பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சும், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சங்கமும் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளன.
எனினும், இந்த திட்டத்தை அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 100 சதவீதம் இணைய முறை மூலம் பணம் செலுத்தவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.