சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமை விடுமுறை அளிக்கப்படும் என மாத்தறை பிராந்திய கல்வி பணிப்பாளர் ஓமினி முதலிகே தெரிவித்துள்ளார்.
மின்,எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் தென் மாகாண ஆளுநர் விலி கமகே ஆகியோர் தலைமையில் இன்று காலை (07) மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மற்றும் அக்குரஸ்ஸ பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் கல்விசார் பணியாளர்கள் , அரச பணியாளர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.