போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது கார் மோதி உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு, பொலிஸ் சார்ஜனாகஉயர்வு வழங்கப்பட்டுள்ளது. வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு, குருந்துவத்தை சுற்று வட்டத்திற்கு அருகில் நேற்று முன்தினம் (05.10.2023) மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று (06) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பில் காரை செலுத்திய தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில்நுட்ப பொறியியளாளராக பணிபுரியும் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.