நிலவும் சீரற்ற வானிலையால் ஒருவர் பலி: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காலி துவக்குகலவத்தை விகாரைக்கு அருகில் உள்ள வீடொன்றின் மீது பாறை சரிந்து வீழ்ந்ததில் 78 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தின் போது குறித்த நபர் வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் தற்போது நிலவும் மோசமான வானிலையினால் மேலும் ஐம்பதாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக மாத்தறை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்ததால் அக்குரஸ்ஸ, அத்துரலிய, கம்புருபிட்டிய, திஹாகொட, மாலிம்படை மற்றும் மாத்தறை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அதிக வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய வெள்ளத்தில் சிக்கியுள்ள மாத்தறை, கம்புறுபிட்டிய, கத்துவ கிராம மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று நடவடிக்கை எடுத்துள்ளது.

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக  மாத்தறை நில்வளா கங்கை பகுதியில் தொடர்ந்தும் மழை பெய்தால் மாத்தறை மாவட்டம் பெரும் அபாயச் சூழலுக்கு உள்ளாகலாம் என நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *