அக்குரஸ்ஸ பிரதேசத்தின் தியலபே பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த மண்சரிவுக்கான அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து அக்குரஸ்ஸ பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் சுதத் சுதசிங்க மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உடனடியாக செயற்பட்ட பிரதேச செயலாளரினால் ஆபத்தான 21 குடும்பங்களை அவ்விடங்களில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 70 பேர் தற்போது தியலபே ஆலயம் மற்றும் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் உரிய அத்தியாவசிய உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் கோரிக்கைக்கமைய, விழிப்புடன் செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஆபத்தில் உள்ள 10 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை அந்த இடங்களில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மண்சரிவினால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும், பல சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் செய்தி வெளியிட்டுள்ளனர்