இலங்கையர்களின் உயிர்களை பறிக்கும் மிக ஆபத்தான போதைப்பொருள் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருள் மனிதர்களை நடை பிணங்கள் போன்று மாற்றும் ஸோம்பி போதை பொருள் என தெரியவந்துள்ளது. அவை ஹெரோயினை விட 50 மடங்கு ஆபத்தானவை எனவும் மருத்துவர் விராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஸோம்பி என்பது விலங்குகளுக்கு மயக்க மருந்து கொடுக்கப் பயன்படும் மருந்துகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோவில் ஒருவர் மட்டுமே காணப்பட்டாலும், அது சமூகத்தில் எவ்வளவு பரவலாக உள்ளது என்பது யாருக்கும் தெரியாது என்று அவர் கூறுகிறார்.
நாட்டை ஆள்பவர்களும், சட்டத்தை பேணுபவர்களும் போதைப்பொருளால் நன்மை அடைவதால் போதைப்பொருளுக்கு உரிய தீர்வைக் கொண்டுவருவதில் அக்கறை காட்டுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.