9 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் : 83 வயது முதியவர் கைது!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 83 வயதுடைய முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று முன்தினம் (04.10.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து இது குறித்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து முதியவரை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *