சரணாலயத்தில் விலங்கு வேட்டையில் நால்வர் : வனவிலங்கு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை!

தப்போவ சரணாலயத்தில் வேட்டைக்கு சென்ற நால்வர் வனவிலங்கு உத்தியோகஸ்தர்களினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தப்போவ சரணாலயத்தின் கம்பிரிகஸ்வெவ பகுதியில் வேட்டைக்குச் சென்ற நால்வர் வில்பத்து விலங்கு அலுவலகத்திற்கு உரித்தான நீலபெம்ம வனவிலங்கு உத்தியோகத்தர்களினால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்கைது நடவடிக்கைகளின் போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 3 ரவைகள், கத்திகள், மின்விளக்குகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக வனவிலங்கு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் வேட்டையாடிய மான் இறைச்சி மற்றும் எறும்புண்ண இறைச்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் பகல புலியாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்களென வனவிலங்குகள் உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் புத்தளம் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். 
இதன்போது ஒவ்வொருவொருக்கும் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணைப்படி நால்வருக்கும் நான்கு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *