மஸ்கெலியா – சாமிமலை – மூன்றாம் கட்டை பகுதியில் சிறிய ரக பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களில் 12 பேர் பெண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதன் காரணமாக வாகனம் வீதியை விட்டு விலகி 30 மீற்றர் பள்ளத்தில் விழுந்துள்ளது.
இந்த விபத்தில், கெப் வண்டியின் சாரதி, அவருக்குப் பின்னால் பயணித்த 12 பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் காயமடைந்து டிக்ஓயா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்