கொழும்பின் பல பகுதிகளை இலக்கு வைத்து எதிர்வரும் நாட்களில் தொடர் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என கிடைத்த தகவல் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நேற்று பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார் என திவயின ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரினால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் அறிக்கையை பரிசீலித்த மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
நீதிமன்றில் இருந்து சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கைதி ஒருவரால் பேருந்தின் ஜன்னலுக்கு வெளியே வீசப்பட்ட சீட்டு துண்டு ஒன்றின் மூலம் இந்தத் தாக்குதல் தொடர்பிலான அடிப்படைத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் சமர்ப்பித்த தகவல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.