2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் 2 ஆம் திகதி வரை நடைபெறுவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்
திட்டமிடப்பட்ட 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
மேலும் மாணவர்கள் பரீட்சைக்குத் தயாராவதற்கு போதிய கால அவகாசம் இல்லை என ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து பரீட்சைகள் பிற்போடப்பட்டதாக அமைச்சர் அப்போது தெரிவித்தார்.