லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை: இன்று முதல் நடைமுறையில்!

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில், 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயுவின் விலை​ 343 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலையாக 3470 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு விலை 137 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 1393 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2.3 கிலோகிராம் எரிவாயு 63 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 650 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *