மூன்றாவது நாளாகவும் தொடரும் முல்லைத்தீவு சட்டத்தரணிகளின் பணிப்பகிஸ்கரிப்பு!

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம்  ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

அதற்கமைய நேற்று முன்தினம் (02) ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று(04) மூன்றாவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

நீதித் துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைகளும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் மேற்கொண்டதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த. பரஞ்சோதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இன்றையதினம்(4) முல்லைத்தீவு நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருக்கின்ற அதே வேளையிலே திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் நடைபெறுகின்ற மாங்குளம் நீதிமன்றத்தினுடைய நடவடிக்கைகளும் இன்றைய தினம் நடைபெறுகின்ற நிலையில் இரண்டு நீதிமன்றங்களுக்கும் சட்டத்தரணிகளின் எவரும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *