வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானம்!

பல வாகனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் வாரத்தில்  தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.  

நாடாளுமன்றத்தில் இன்றையதினம்(04.10.2023) நடைபெற்று வரும் அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  தனியார் வாகனங்கள் தொடர்பான 304 HS குறியீடுகளின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை.

தற்போதுள்ள அந்நிய செலாவணி பற்றாக்குறை மற்றும் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்க வேண்டியதன் காரணமாக, சில பொருட்களை இந்த நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

அதன்படி, சுங்கத் திணைக்களம் மற்றும் குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் தங்கள் வணிகத்தை மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்பட்டது. அதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

இதனால் தற்போதைக்கு, HS குறியீடு 304 தொடர்பான கட்டுப்பாடுகளைத் தவிர, ஏனைய பல வாகனங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவோம் என்று நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *