ஆறு மாத குழந்தையை அடித்து கொன்ற இளம் தாய்!

ஊர்பொக்க கட்டுவன கெதர பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரை அவரது குழந்தையை அடித்து கொன்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் தான் பெற்றெடுத்த ஆறு மாதமும் 11 நாட்களுமே ஆன பச்சிளம் பிஞ்சுவை அடித்துக் கொன்றதாகக் கூறப்படும் குழந்தையின் 21 வயதுடைய தாயார் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஊர்பொக்க காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் கடந்த 30ஆம் திகதி குழந்தையை கழுவிக்கொண்டிருந்த போது தவறுதலாக சுவரில் தலை மோதியதாகக் கூறி குழந்தையை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்ததையடுத்து, சந்தேக மரணம் எனக் கருதி ஊறுபொக்க காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த விசாரணைகளின் போது தாயினால் கைக்குழந்தை கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து சந்தேகத்தின் பேரில் தாயை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *