மட்டக்களப்பு – ஏறாவூர் மிச்நகர் சந்தி தொடருந்து கடவையில் முச்சக்கரவண்டி ஒன்று தொடருந்துடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இவ்விபத்து நேற்றைய தினம் (03.10.2023) இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மிச்நகர் சந்தியில் முச்சக்கரவண்டி பயணித்துக் கொண்டிருந்த 38 வயதுடைய அப்துல் றகுமான் ரமீஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.