திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறுபிட்டிகுளம் பகுதியில் மரவள்ளி தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று முன்னிரவு (02) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவி்த்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைவாக பொலிஸார் நடத்திய விசேட சோதனை நடவடிக்கையில் எட்டு கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவத்தில் இவ்வாறு கைதானவர் நிலாவெளி – சிறுபிட்டிகுளம் பகுதியில் வசித்து வரும் 26 வயதுடைய பிரபாகரன் நிரோஷன் என்பவராவார்.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கஞ்சா செடிகளுடன் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்