வவுனியா புதுக்குளம் பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தானது நேற்று(03) மதியம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த இச்சம்பவத்தில் பாடசாலையிலிருந்து ஒருவர் தனது 7 வயது மகள் மற்றும் 9 வயதுடைய சிறுவனையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றபோதே விபத்தில் சிக்கியுள்ளனர்.
இவ்விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவர்களை வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கனிஸ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஒன்பது வயதுடைய வி. டினோஜன் என்ற சிறுவனே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்ததால் ஏற்பட்டதா அல்லது அதே திசையில் வந்த கனரக வாகனத்தில் மோதுண்டு ஏற்பட்டதா என ஈச்சங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.