களுத்துறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மில்லனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்கொலைச் சம்பவம் களுத்துறை – மில்லனியவில் நேற்று (02.10.2023) மாலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் மில்லனிய கிம்மன்துடாவ பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கொலையை செய்த நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை தேடும் பணி ஆரம்பிக்கபட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பணத் தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தாக்கப்பட்ட நபர் பொலிஸாரை நோக்கி ஓடியதாகவும், காயமடைந்த அவரை பொலிஸார் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன